Monday, March 12, 2012

ஆட்டோ டிரைவரின் அர்த்தமுள்ள வாழ்க்கை.

ஆட்டோ டிரைவரின் அர்த்தமுள்ள வாழ்க்கை.

மும்பை, அந்தேரியிலிருந்து பாந்த்ரா சென்ற ஒருவரின் அனுபவம் இது.

ஆட்டோவில் ஏறியவுடன் இன்ப அதிர்ச்சி. சிறிய தொலைக்காட்சிப் பெட்டியில் தூர்தர்ஷன் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது. கண்களைச் சுழலவிட்டதில் முதலுதவிப் பெட்டி, தீத்தடுப்பு சாதனம், டெட்டால் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களின் தத்துவங்கள் ஆங்காங்கே ஆட்டோவில் எழுதப்பட்டிருந்தது. மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ஹேமந்த் கார்கரே, மேஜர் உன்னிகிருஷ்ணன் போன்றோரின் படங்களும் மாட்டப்பட்டுள்ளன. மேலும் மீட்டர் தொகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 50% தள்ளுபடி, பார்வையற்றோருக்கு குறிப்பிட்ட தூரம் வரை இலவச சவாரி போன்ற சலுகைகளையும் அளிக்கிறார்.


டிரைவரிடம் விசாரித்தபோது ஏழு ஆண்டுகளாக தான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததாகவும் அந்நிறுவனம் வேலையை விட்டு நிறுத்தி விட்டதால் குடும்பத்தைக் காப்பாற்றவும் குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவும் ஆட்டோ ஓட்டுவதாகத் தெரிவித்தார்.

காலை எட்டு மணி முதல் இரவு 10 மணி வரை உழைப்பதாகவும் தெரிவித்தார்.
ஓய்வு நாட்களில் முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கித்தருகிறார்.

பயனுள்ள வாழ்க்கை வாழும் அவரது பெயர் சந்தீப். ஆட்டே எண். MH-02-Z-8508.

ரியல் ஹீரோ.

No comments:

Post a Comment