Tuesday, March 17, 2009

ஒரு சபாஷ் போடுங்க யாருக்கு????




உலகப்புகழ் பெற்ற காமெடி நடிகர் சார்லி சாப்ளினுக்கு 62 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படுகிறது. 1914ம் ஆண்டு பிட்வீன் ஷோவர்ஸ் என்ற படத்தின் மூலம் திரையில் முகம் காட்டத் தொடங்கிய சார்லி சாப்ளின் அதன் பின்னர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து பல நூறு விருதுகளை சொந்தமாக்கிக் கொண்டார். பேசாமலேயே நடிப்பின் மூலம் நகைச்சுவை செய்ய முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய இந்த உன்னத காமெடியனின் இயற்பெயர் சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் 1889ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்த சார்லி சாப்ளின் ஹாலிவுட் திரையுலகில் ஒரு பெரும் சகாப்தத்தையே உருவாக்கிய பெருமைக்குரியவராவார். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு. சாப்ளின் கோமாளித்தனமான படங்கள் எல்லாம் ‘வலியவனை எளியவனால் வெல்லமுடியும்’ என்கிற ஒற்றை வரி கருத்தை உள்ளடக்கியே இருக்கும். பலருக்கும் தன்னம்பிக்கை கொடுத்த இவர் 1977ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் தனது 88வது வயதில் காலமானார்.தன் வாழ்நாளில் 2 முறை கவுரவ ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். அதோடு சர் என்ற கவுரவ பட்டத்தை பிரிட்டிஷ் அரசு வழங்கி கவுரவித்துள்ளது. இங்கிலாந்து அரசு இவரது உருவத்தை அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது. அமெரிக்க அஞ்சல் தலையிலும் சாப்ளினின் உருவம் இடம்பெற்றுள்ளது. இவரது வாழ்க்கை பயணத்தை சாப்ளின் என்ற பெயரில் இயக்குனர் சர்.ரிச்சர்ட் ஒரு திரைப்படமாக உருவாக்கினார். அந்த படம் நன்றாக ஓடி சாப்ளினினுக்கு பெருமையை தேடிக் கொடுத்தது. உலகத்தில் 20 தலைச்சிறந்த காமெடியர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சாப்ளினுக்கு தற்போது மேலும் ஒரு கவுரவத்தை வழங்கவிருக்கிறது கன்னட திரையுலகம்.கர்நாடக மாநிலத்தில் உள்ள மரவந்தி கடற்கரையில் சார்லி சாப்ளினுக்கு 62 அடி உயரத்தில் சிலை அமைக்க கன்னட திரையுலகை சேர்ந்த இயக்குனர் ஒருவர் திட்டமிட்டிருக்கிறார். ஹவுஸ் புல் என்ற பெயரில் உருவாகி வரும் காமெடி பட சூட்டிங்கிற்காக சாப்ளின் சிலையை கடற்கரையில் வைக்க உள்ளனர். டைரக்டர் ஹேமந்த் ஹெக்டே இயக்கும் இந்த படத்தின் கதைப்படி வேலைவெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் இரு இளைஞர்கள் சாப்ளின் சிலை அருகே அமர்ந்து யோசிக்கிறார்கள். சாப்ளினின் வாழ்க்கை வரலாறைப் பற்றி ‌தெரிந்து கொள்ளும் அவர்களுக்குள் ஒரு வேகம் வந்து முன்‌னேறுகிறார்களாம். சிலை குறித்து டைரக்டர் ஹேமந்த் அளித்துள்ள பேட்டியில், சாப்ளின் சிலை 62 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. ஆர்ட் டைரக்டர் சேத்தன் முந்தாதிதான் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். முறைப்படி கர்நாடக அரசிடம் அனுமதி பெற்ற பின்னரே இதற்கான பணிகளை துவக்கியுள்ளோம். இந்த சிலை ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. எங்கள் சூட்டிங் முடிந்த பின்னரும் அந்த சிலை அங்கேயேதான் இருக்கும். சாப்ளினின் சிலை கண்டிப்பாக மக்களை கவரும். கின்னஸ் புத்தகத்திற்கும் அனுப்ப முடிவு செய்திருக்கிறோம், என்றார்.மறைந்த காமெடி நடிகர் நாகேஷ், தனது ரோல் மாடலாக சார்லி சாப்ளினைத்தான் கருதுவதாக பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். நாகேஷூக்கு மட்டுமல்ல.. உலக காமெடியர்கள் பலருக்கும் ரோல்மாடலாக இருக்கும் சார்லி சாப்ளினுக்கு பெருமை ‌சேர்க்கும் வகையில் சிலை அமைக்கும் கன்னட திரையுலகை பாராட்டலாம்!

Saturday, March 14, 2009

கோடையில் சாப்பிட வேண்டியவை



தர்பூசணி :-


இது தாகத்தைத் தணிக்கும். பசியினையும் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும் மருந்தாக உதவுகிறது. உடலில் புத்துணர்ச்சியைக் கூட்டுவதோடு, மனதிற்கும் எழுச்சி தருகிற பழம் இந்த தர்ப்பூசணி.


ஆரஞ்சு:-


பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் பயன்படும் ஆரஞ்சை ஆயுர்வேத சிகிச்சை முறை பெரிதும் கைக்கொள்கிறது. வாயைச் சுத்தமாக்குகிறது. காய்ச்சலுக்கும் அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்துகிறது. சளி பிடித்துள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம். இரவு படுக்கும் முன்பு ஒன்றிரண்டு ஆரஞ்சுப் பழங்களைத் சாப்பிட்டு விட்டுப் படுக்கலாம். காலையிலும் சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் பெரிதும் பயன் அடையலாம். ஆஸ்துமா மற்றும் நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. காய்ச்சலின்போது, நோய்களுக்கு அருமருந்து ஆரஞ்சு, உடலுக்குத் தெம்பு கூட்டும், செரிமானத்தைச் சரியாக்கி, பசியைத் தூண்டும். குடல்களின் பாதையில் தொற்று நேராமல் பராமரிக்கும். குடல்களின் இயக்கத்திற்கு வலுச் சேர்க்கும். கர்ப்ப காலப் பெண்மணிகளுக்கு ஏற்படும் குமட்டலுக்கு சிறந்தது ஆரஞ்சு. செரிக்காத உணவால், வயிற்றில் பொருமலுடன் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறை குடிக்கவேண்டும். செரிமானச் சக்தியைக் கூட்டி, செரிமான உறுப்புகளை வலுவூட்டி வயிற்றுப் பிரச்னையைத் தீர்க்கும்.


சாத்துக்குடி:-


குளிர்ச்சியான இனிப்பான சுவையான பழம் சாத்துக்குடி. தாகத்தைத் தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது. வயிற்றில் அமிலத்தன்மை சேர்வதை இதிலுள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் மிகுதியாகக் கொண்டுள்ளது. சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாறை வெந்நீரில் கலந்து, அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது. காய்ச்சலின் போது, வெறுமனே சாத்துக்குடி சாறைக் குடித்தாலே போதும். உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்க வல்லது.


வெள்ளரிக்காய்:-


வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகையுண்டு. வெள்ளரியும் நல்ல நீரிளக்கி. செரிமானத்திற்கு உதவுவது. தன்வந்திரி நிகண்டு காரா கூறுகிறது இப்படி. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியையூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்கறி வகையிலானது. வெள்ளரியில் ‘கலோரி’கள் குறைவானதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு நன்றாக ஒத்துழைக்கும். வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் மிக அதிகப் பலன்கள் விளையும். கீல் வாதத்தை போக்க உதவுகிறது. வெள்ளரி, சிறுநீர்க் கோளாறுகளுக்கும் உதவக்கூடியது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாக உட்கொள்வது சாலச் சிறந்தது.

Friday, March 13, 2009

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்



நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது...!’’ என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்... ‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம். நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்! பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர். அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள். இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள். இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்! நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!

எலிகள் தொல்லை

தீவிரவாதத்தை கூட ஒழித்து விட்டோம். ஆனால், இந்த எலிகளை தான் ஒழிக்க முடியவில்லை

ஐயோ இது நம்ம இந்தியா தான்



அரியானா போலீஸ் அலுவலகத்தில் ஆவணங்களை அழிக்கும் எலிகளை ஒழிக்க வெள்ளை எலிகள் வளர்க்கப்படுகின்றன. அரியானா மாநிலம் கர்னால் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ஏராளமான சுண்டெலி மற்றும் பெருச்சாலிகள் ஆவணங்களை கடித்து குதறி சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து, கர்னால் மாவட்ட போலீஸ் அதிகாரி ஏ.எஸ்.சாவ்லா குறிப் பிடுகையில், "இந்த எலிக் கூட்டத்தை ஒழிக்க பூனைகளை வளர்த்தோம். பூனைகளே இந்த எலிக் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஓடி விட்டன. எனவே, வெள்ளை எலிகளை வளர்த்து வருகிறோம். "செழுமையான வெள்ளை எலிகளை பார்த்து கருப்பு நிற எலிகள் பயந்து ஓடி விடும், என ஆராய்ச்சியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை கால் நடை மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, எங்களது அலுவலகத்தில் வெள்ளை எலிகளை வளர்த்து வருகிறோம். வெள்ளை எலிகள் எந்த பொருளையும் கடித்து சேதப்படுத்தாது,' என்றார். அரியானா மட்டுமல்ல, பஞ்சாப் அரசும் எலிகளுடன் போராடி வருகிறது. ""எங்கள் மாநிலத்தில் நாங்கள் தீவிரவாதத்தை கூட ஒழித்து விட்டோம். ஆனால், இந்த எலிகளை தான் ஒழிக்க முடியவில்லை. ""தானிய கிடங்குகளையும், வாய்க்கால்களையும் இந்த எலிகள் சேதப்படுத்தியுள்ளன. அதுமட்டுமல்லாது, ரயில்வேத்துறை அமைத்துள்ள கேபிள் ஒயர் களையும் கடித்து சின்னாபின்னமாக்கியுள்ளன. ""எலிகளை ஒழிப்பதற்காக 17 லட்ச ரூபாய் செலவில் எலி ஒழிப்பு மருந்துகள் வாங்கப் பட்டுள்ளன. இது எந்த அளவுக்கு பலனளிக்கும் என தெரியவில்லை,'' என்கிறார் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர்.

Monday, March 9, 2009

ஆன்மீக மனிதன்

ஆன்மீக மனிதனின் பரிணாமம்!
மறைபொருள் ஞானமும் ஆற்றல்களும் ஆபத்தான கவர்ச்சிகள், சிக்க வைக்கும் தடைகள் எனத் தள்ளிவிட்டு ஆன்மீக அனுபவம் ஆத்மாவின் தூய உண்மையை மட்டுமே நாடியுள்ளது. தத்துவ ஞானத்தைத் தள்ளிவிட்டு அதற்குப் பதிலாக இதயத்தின் ஆர்வத்தின் மூலம் அல்லது உள்நோக்கிய ஆன்மிக மாற்றத்தின் மூலம் இலட்சியத்தை அடைந்துள்ளது. எல்லா சமயக் கொள்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் தாழ்ந்தபடியில் உள்ளவை அல்லது ஆரம்ப அணுகுமுறை எனக்கருதி அவற்றைப் பின்னால் தள்ளிவிட்டு, இவற்றின் துணை எதையும் விரும்பாமல் ஆன்மிக மெய்மையின் தொடர்பு ஒன்றையே நாடிச் சென்றுள்ளது. webdunia photo WD - ஸ்ரீ அரவிந்தர் உள் ஜீவனைத் திறக்கும் தனது முயற்சியில் இயற்கை முதன்மையாக நான்கு வழிகளைப் பின்பற்றியுள்ளது - சமயம், மறைபொருள் ஞானம் (occultism), ஆன்மகச் சிந்தனை, அக ஆன்மிக அனுபூதியும் அனுபவமும். முதல் மூன்றும் அணுகுமுறைகள், இறுதியாக வருவது முடிவான நுழைவாயில். இந்த நான்கு ஆற்றல்களும் ஒரே சமயத்தில் வேலை செய்துள்ளன, சிறிய அளவிலோ பெரிய அளவிலோ ஒன்றோடென்று தொடர்பு கொண்டும், சில சமயங்களில் அடிக்கடி மாறக்கூடிய ஒத்துழைப்புடனும், சில சமயங்களில் ஒன்றோடென்று வாதிட்டுக் கொண்டும், சில சமயங்களில் தனித்தனியே பிரிந்தும் வேலை செய்துள்ளன. சமயம் அதன் சடங்குகளில், கிரியைகளில் மறைஞான அம்சங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. அது ஆன்மிகச் சிந்தனையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. சில சமயங்களில் அதிலிருந்து ஒரு சமயக் கோட்பாட்டை உருவாக்கியுள்ளது. சில சமயங்களில் அதற்கு ஆதாரமான ஆன்மிக தத்துவக் கொள்கையைப் பெற்றுள்ளது. பொதுவாக மேற்கு நாடுகள் முதலில் சொன்ன முறையையும் கிழக்கு நாடுகள் இரண்டாவது முறையையும் பின்பற்றியுள்ளன. ஆனால் ஆன்மிக அனுபவமே சமயத்தின் இறுதி இலட்சியமும் சாதனையும் ஆகும். அதுவே அதன் விண் சிகரம். ஆனால் சில சமயங்களில் சமயம் மறைபொருள் ஞானத்தைத் தடை செய்துள்ளது அல்லது மிகவும் குறைத்துள்ளது. அது தத்துவ ஞான மனத்தை வரட்டு அறிவுள்ள அந்நிய ஒன்றாக ஒதுக்கியத்தள்ளியும் இருக்கிறது. பிடிவாதமான கொள்கை, சமயப்பற்றுடைய உணர்ச்சி வேகம், நன்னடத்தை இவற்றிற்கே எல்லா முக்கியத்துவத்தையும் கொடுத்துள்ளது. ஆன்மிக அனுபூதியையும் அனுபவத்தையும் தேவையில்லாததாக ஒதுக்கியுள்ளது அல்லது மிகச்சிறிதளவே வைத்துக் கொண்டுள்ளது. மறைபொருள் ஞானம் சில சமயங்களில் ஆன்மிக நோக்கத்தைத் தனது இலக்காக வைத்துள்ளது. மறைபொருள் ஞானத்தையும் அனுபவத்தையும் அதற்குரிய அணுகுமுறையாக வைத்துள்ளது. ஒரு வகையான மறைஞான தத்துவத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் பெரும்பாலும் அது ஆன்மிகப் பார்வையில்லாமல் மறை பொருள் ஞானம், அதைப் பழகுதல் என்னும் அளவிலேயே நின்றுவிடுகிறது, அது மாந்திரீகம் அல்லது வெறும் மாயவித்தை இவற்றை நோக்கியும் சென்றுள்ளது, வழி தவறி சூனியம் செய்வதற்குக் கூட போயிருக்கிறது.