Tuesday, March 17, 2009

ஒரு சபாஷ் போடுங்க யாருக்கு????




உலகப்புகழ் பெற்ற காமெடி நடிகர் சார்லி சாப்ளினுக்கு 62 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படுகிறது. 1914ம் ஆண்டு பிட்வீன் ஷோவர்ஸ் என்ற படத்தின் மூலம் திரையில் முகம் காட்டத் தொடங்கிய சார்லி சாப்ளின் அதன் பின்னர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து பல நூறு விருதுகளை சொந்தமாக்கிக் கொண்டார். பேசாமலேயே நடிப்பின் மூலம் நகைச்சுவை செய்ய முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய இந்த உன்னத காமெடியனின் இயற்பெயர் சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் 1889ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்த சார்லி சாப்ளின் ஹாலிவுட் திரையுலகில் ஒரு பெரும் சகாப்தத்தையே உருவாக்கிய பெருமைக்குரியவராவார். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு. சாப்ளின் கோமாளித்தனமான படங்கள் எல்லாம் ‘வலியவனை எளியவனால் வெல்லமுடியும்’ என்கிற ஒற்றை வரி கருத்தை உள்ளடக்கியே இருக்கும். பலருக்கும் தன்னம்பிக்கை கொடுத்த இவர் 1977ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் தனது 88வது வயதில் காலமானார்.தன் வாழ்நாளில் 2 முறை கவுரவ ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். அதோடு சர் என்ற கவுரவ பட்டத்தை பிரிட்டிஷ் அரசு வழங்கி கவுரவித்துள்ளது. இங்கிலாந்து அரசு இவரது உருவத்தை அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது. அமெரிக்க அஞ்சல் தலையிலும் சாப்ளினின் உருவம் இடம்பெற்றுள்ளது. இவரது வாழ்க்கை பயணத்தை சாப்ளின் என்ற பெயரில் இயக்குனர் சர்.ரிச்சர்ட் ஒரு திரைப்படமாக உருவாக்கினார். அந்த படம் நன்றாக ஓடி சாப்ளினினுக்கு பெருமையை தேடிக் கொடுத்தது. உலகத்தில் 20 தலைச்சிறந்த காமெடியர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சாப்ளினுக்கு தற்போது மேலும் ஒரு கவுரவத்தை வழங்கவிருக்கிறது கன்னட திரையுலகம்.கர்நாடக மாநிலத்தில் உள்ள மரவந்தி கடற்கரையில் சார்லி சாப்ளினுக்கு 62 அடி உயரத்தில் சிலை அமைக்க கன்னட திரையுலகை சேர்ந்த இயக்குனர் ஒருவர் திட்டமிட்டிருக்கிறார். ஹவுஸ் புல் என்ற பெயரில் உருவாகி வரும் காமெடி பட சூட்டிங்கிற்காக சாப்ளின் சிலையை கடற்கரையில் வைக்க உள்ளனர். டைரக்டர் ஹேமந்த் ஹெக்டே இயக்கும் இந்த படத்தின் கதைப்படி வேலைவெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் இரு இளைஞர்கள் சாப்ளின் சிலை அருகே அமர்ந்து யோசிக்கிறார்கள். சாப்ளினின் வாழ்க்கை வரலாறைப் பற்றி ‌தெரிந்து கொள்ளும் அவர்களுக்குள் ஒரு வேகம் வந்து முன்‌னேறுகிறார்களாம். சிலை குறித்து டைரக்டர் ஹேமந்த் அளித்துள்ள பேட்டியில், சாப்ளின் சிலை 62 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. ஆர்ட் டைரக்டர் சேத்தன் முந்தாதிதான் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். முறைப்படி கர்நாடக அரசிடம் அனுமதி பெற்ற பின்னரே இதற்கான பணிகளை துவக்கியுள்ளோம். இந்த சிலை ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. எங்கள் சூட்டிங் முடிந்த பின்னரும் அந்த சிலை அங்கேயேதான் இருக்கும். சாப்ளினின் சிலை கண்டிப்பாக மக்களை கவரும். கின்னஸ் புத்தகத்திற்கும் அனுப்ப முடிவு செய்திருக்கிறோம், என்றார்.மறைந்த காமெடி நடிகர் நாகேஷ், தனது ரோல் மாடலாக சார்லி சாப்ளினைத்தான் கருதுவதாக பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். நாகேஷூக்கு மட்டுமல்ல.. உலக காமெடியர்கள் பலருக்கும் ரோல்மாடலாக இருக்கும் சார்லி சாப்ளினுக்கு பெருமை ‌சேர்க்கும் வகையில் சிலை அமைக்கும் கன்னட திரையுலகை பாராட்டலாம்!

No comments:

Post a Comment