Friday, March 13, 2009

எலிகள் தொல்லை

தீவிரவாதத்தை கூட ஒழித்து விட்டோம். ஆனால், இந்த எலிகளை தான் ஒழிக்க முடியவில்லை

ஐயோ இது நம்ம இந்தியா தான்



அரியானா போலீஸ் அலுவலகத்தில் ஆவணங்களை அழிக்கும் எலிகளை ஒழிக்க வெள்ளை எலிகள் வளர்க்கப்படுகின்றன. அரியானா மாநிலம் கர்னால் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ஏராளமான சுண்டெலி மற்றும் பெருச்சாலிகள் ஆவணங்களை கடித்து குதறி சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து, கர்னால் மாவட்ட போலீஸ் அதிகாரி ஏ.எஸ்.சாவ்லா குறிப் பிடுகையில், "இந்த எலிக் கூட்டத்தை ஒழிக்க பூனைகளை வளர்த்தோம். பூனைகளே இந்த எலிக் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஓடி விட்டன. எனவே, வெள்ளை எலிகளை வளர்த்து வருகிறோம். "செழுமையான வெள்ளை எலிகளை பார்த்து கருப்பு நிற எலிகள் பயந்து ஓடி விடும், என ஆராய்ச்சியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை கால் நடை மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, எங்களது அலுவலகத்தில் வெள்ளை எலிகளை வளர்த்து வருகிறோம். வெள்ளை எலிகள் எந்த பொருளையும் கடித்து சேதப்படுத்தாது,' என்றார். அரியானா மட்டுமல்ல, பஞ்சாப் அரசும் எலிகளுடன் போராடி வருகிறது. ""எங்கள் மாநிலத்தில் நாங்கள் தீவிரவாதத்தை கூட ஒழித்து விட்டோம். ஆனால், இந்த எலிகளை தான் ஒழிக்க முடியவில்லை. ""தானிய கிடங்குகளையும், வாய்க்கால்களையும் இந்த எலிகள் சேதப்படுத்தியுள்ளன. அதுமட்டுமல்லாது, ரயில்வேத்துறை அமைத்துள்ள கேபிள் ஒயர் களையும் கடித்து சின்னாபின்னமாக்கியுள்ளன. ""எலிகளை ஒழிப்பதற்காக 17 லட்ச ரூபாய் செலவில் எலி ஒழிப்பு மருந்துகள் வாங்கப் பட்டுள்ளன. இது எந்த அளவுக்கு பலனளிக்கும் என தெரியவில்லை,'' என்கிறார் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர்.

No comments:

Post a Comment